தேனி திமுகவின் தோனி ஆகிறார் தங்கம் - கலக்கத்தில் கம்பம் ராமகிருஷ்ணன் ??

By Asianet Tamil  |  First Published Aug 13, 2019, 4:15 PM IST

தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக விரைவில் தங்க தமிழ்ச் செல்வன் அறிவிக்கப்பட இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .


கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி மக்களவை தொகுதியில் தினகரனின் அமமமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் தங்க தமிழ்ச் செல்வன் . பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் மோசமான தோல்வியை தழுவினார் . இதனாலும் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதல்களாலும் அக்கட்சியில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் வைத்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டார் . கட்சியில் இணைத்த கையோடு ஸ்டாலினை தேனிக்கு அழைத்து வந்து பிரம்மாண்ட கூட்டம் நடத்தினார்.

Latest Videos

undefined

இந்த நிலையில் தான் தற்போது தேனி மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் கம்பம் ராமகிருஷ்ணனுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது . சமீபத்தில் தங்க தமிழ்ச் செல்வன் தேனி மாவட்ட நிர்வாகிகளை அவர்களின் இருப்பிடம் தேடி நேரில் சந்திக்க வருவதாக தகவல் அனுப்பினாராம் . இதனால் அதிர்ச்சி அடைந்த கம்பம் ராமகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் தன் இல்லத்திற்கு வரச்சொல்லி , அங்கு வைத்து எது வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள் என்று தங்கத்திற்கு தகவல் அனுப்பி உள்ளார் . இதற்கு உடன்படாத தங்கம் அமைதியாக இருந்து விட்டாராம் .

கம்பம் ராமகிருஷ்ணன் , தேனி மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து கொண்டு அறிவாலயத்திற்கு விசிட் அடித்துள்ளார் . அவர்களை பார்த்த ஸ்டாலின் "நீங்க என்ன காரணத்திற்கு வந்துருக்கீங்கனு தெரியும் . எல்லாத்தையும் நா பாத்துக்கிறேன் . விரைவில் அறிவிப்பு வரும்.. போங்க " என்று சொல்லி அனுப்பி உள்ளார் . அதாவது தேனி மாவட்ட பொறுப்பாளராக விரைவில் தங்க தமிழ்ச் செல்வன் அறிவிக்கப்படவுள்ளார் என்பதை தான் ஸ்டாலின் அப்படி  கூறியதாக திமுக உடன்பிறப்புகள் பேசிக்கொள்கின்றனர் . இதனால் தனது பதவிக்கு ஆப்பு வந்து விடும் என்ற பயத்தில் உள்ளாராம் கம்பம் ராமகிருஷ்ணன் .

ஏற்கனவே தினகரனிடம் இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு மாவட்ட பொறுப்பு , தேர்தலில் சீட் என நன்றாக கவனித்த ஸ்டாலின் ,தன்னையும் கவனிப்பார் என்று தங்கம் உற்சாகமாக உள்ளதாக தேனி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

click me!