தேனி அருகே தனியார் பேருந்தும்- வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தேனி அருகே தனியார் பேருந்தும்- வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
போடியிலிருந்து வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தேனி நோக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தீர்த்ததொட்டி பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து- வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேன் கவிழ்ந்ததில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தனியார் பேருந்துக்கு தீ வைக்க முயற்சித்தனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.