தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..!

By Thiraviaraj RM  |  First Published Jul 11, 2019, 6:44 PM IST

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தேனி அருகே உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அணுச்சக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது.


இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தேனி அருகே உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அணுச்சக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது. நியூட்ரினோ ஆய்வகத்தால் எந்தவித சுற்றுச்சூழல்  பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 2கி.மீ.க்கு மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது. அதே போல் நியூட்ரினோ ஆய்வகத்தில் இருந்து எந்த விதமான கதிர்வீச்சும் வெளியாகாது என மத்திய அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரத்தில் உள்ள அம்பரப்பர் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2010 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதே நேரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள், தேனி பகுதியை சேர்ந்தவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பலரும் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

Tap to resize

Latest Videos

 

 இதனிடையே நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுப்புற சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, 2 கி.மீ. தொலைவுக்கு மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 
 

click me!