இருசக்கர வாகனம் மீது கார் பயங்கர மோதல்... கர்ப்பிணி மனைவி கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த கணவர்..!

By vinoth kumar  |  First Published Oct 31, 2019, 6:11 PM IST

தேனி அருகே இருசக்கரம் வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கர்ப்பிணி மனைவி கண் முன்னே கணவன் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தேனி அருகே இருசக்கரம் வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கர்ப்பிணி மனைவி கண் முன்னே கணவன் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தருமத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ் ( 32). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சுதா (26). இவர்களுக்கு தாரணிகா (6), பிரணிகா (3) என்ற 2 மகள்கள் உள்ளனர். சுதா தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று சதீஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். 

Tap to resize

Latest Videos

அப்போது, எதிரே வந்த கார் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில், 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். படுகாயமடைந்த சுதா மற்றும் 2 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சுதாவின் கருகலைந்ததோடு அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரை ஓட்டி வந்த சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!