டெல்டா மாவட்டங்களில் விவசாய தொழில் பேட்டைகள் - அமைச்சர் ராஜா தகவல்

By Velmurugan sFirst Published May 16, 2023, 9:40 AM IST
Highlights

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழில் பேட்டைகள் வெகு விரைவில் வரும் என தஞ்சையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு முதல்வர் டெல்டா மாவட்டம் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார். விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் கொடுத்தவர்.  தற்போது டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை வருவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளார்.

நிச்சயமாக வெகுவிரைவில் விவசாயம் சார்ந்த தொழில் பேட்டைகள் அமைவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. டெல்டா மாவட்டங்களில் நிலம் கிடைப்பது கடினம். யாரேனும் நிலத்தை தாமாக முன்வந்து கொடுக்க வந்தால் மிகவும் சந்தோஷம். சிறிய அளவிலான விவசாயம் சார்ந்த மதிப்பு கூட்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். 

மயிலாடுதுறையில் குண்டு வெடித்த விவகாரம்; சக்தி வாய்ந்த பால்ரஸ் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பதற்றம்

சிறப்பான திட்டங்கள் வெகுவிரைவில் டெல்டா மாவட்டங்களுக்கு வரும். அறுவடைக்குப் பிறகு அதனை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் வகையில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும் என்றார். மேலும் அவர் பேசுகையில், இந்த அமைச்சர் பதவி என்பது எனக்கானது மட்டுமல்ல அனைவருக்குமான பதவி. முதலமைச்சர் எப்போது டெல்டாக்காரன் என சொன்னாரோ அப்போது நாங்கள் அனைவரும் அமைச்சராகி விட்டோம் என்றார்.

காரில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள்; பெண்ணை தரதரவென இழுத்துச் சென்றதால் பரபரப்பு

click me!