ஆபாச வார்த்தையால் திட்டி பெண்களை செருப்பால் அடித்த திமுக நிர்வாகியின் கணவர்! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?

By vinoth kumar  |  First Published Apr 24, 2023, 1:50 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தீபாலட்சுமி. இவர் பேராவூரணி வடக்கு ஒன்றிய திமுக மகளிரணி அமைப்பாளராக உள்ளார். 


குப்பை சேகரித்த பழங்குடியின பெண்களை செருப்பால் அடித்த திமுக மகளிரணி நிர்வாகியின் கணவர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தீபாலட்சுமி. இவர் பேராவூரணி வடக்கு ஒன்றிய திமுக மகளிரணி அமைப்பாளராக உள்ளார். இவரது கணவர் சுவாமிநாதன்(56). இந்நிலையில், குறிச்சி மாரியம்மன் கோயில் பகுதியில் பழங்குடியின பெண்கள் சிலர் நேற்று பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட குப்பையை சேகரித்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

அப்போது, சுவாமிநாதன் இடத்துக்கு சொந்ததான இடத்திலும் பழங்குடியின பெண்கள் குப்பைகளை சேகரித்துள்ளனர். இதனை கண்ட சுவாமிநாதன் பொருட்களை திருடி செல்வதாக கூறி அந்த பெண்ணை தரக்குறைவாக பேசி, அவர்கள் பையில் வைத்திருந்த  பொருட்களை கீழே கொட்டும்படி கூறி செருப்பால் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் உத்தரவுப்படி வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து  சுவாமிநாதனை கைது செய்தனர்.

click me!