தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சேதுபாவாசத்திரம் அருகே இன்று அதிகாலையில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வேன் மனோரா என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.
பட்டுக்கோட்டை அருகே தடுப்புச் சுவர் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சேதுபாவாசத்திரம் அருகே இன்று அதிகாலையில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வேன் மனோரா என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இதில், வேன் அப்பளம் போல் நொறுங்கியது.
undefined
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் 5 மணிநேரம் மின்தடையா?
இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். விபத்து குறித்து அவ்வழியாக சென்றவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- கொடுமைப்படுத்தியதை சொல்லி கதறும் ரேகா! நெஞ்சை உலுக்குகிறது! ஆளுங்கட்சி எம்எல்ஏ மகனுக்கு எதிராக திமிரும் திருமா
மேலும் உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் விபத்தில் சிக்கியவர்கள் தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணிக்கு வேனில் சென்றுக்கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது தெரியவந்தது.