அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை - முன்னாள் அமைச்சர்

Published : Feb 08, 2024, 12:09 PM IST
அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை - முன்னாள் அமைச்சர்

சுருக்கம்

மற்ற அரசியல் கட்சிகள் தயாரிக்கும் தேர்தல் அறிக்கையை விட அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை முற்றிலும் வித்தியாசமாகவும், அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையிலும் இருக்கும் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தஞ்சை மண்டல  கருத்து கேட்புக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, செம்மலை, உதயகுமார், காமராஜ், வைகைச்செல்வன், ஓஎஸ்.மணியன் உள்ளிட்டோர் பங்கேற்று விவசாயிகள் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த பிரதிநிதிகள் உடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறுகையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுபடி இன்று தஞ்சை மண்டலத்துக்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள், மீனவர் சங்கங்கள், தொழில் முனைவோர் மற்றும் அனைத்து தரப்பினரிடமும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. 

விளையாட்டு துறையின் தலைநகரமாக தமிழகத்தை மாற்ற பல்வேறு முயற்சிகள் - அமைச்சர் உதயநிதி

அவர்கள் எங்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். அவர்கள் கூறிய கருத்துக்கள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும். இதேபோல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கருத்துக்கள் கேட்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் பல்வேறு பயனுள்ள திட்டங்கள் இருக்கும். 

ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா; திருப்பூரில் குடுகுடுப்பை வாசித்து பிரசாரத்தை தொடங்கிய திமுக

மற்ற அரசியல் கட்சிகள் தயாரிக்கும் தேர்தல் அறிக்கையை விட அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை முற்றிலும் வித்தியாசமாக அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும். திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கிறார்கள் என்றால் அ.தி.மு.க. மீதும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதே இதற்கு காரணமாகும். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் அனைத்து அம்சங்களும் உடனே நிறேவேற்றப்படும் என்று மக்கள் தீராத நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எப்போதுமே காப்பாற்றுவார் என தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது! ஆசிரியை கொலை! கைதானவர் சிறையில் விபரீத முடிவு! பதறிய போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய கோர விபத்து! 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி! 2 பேர் படுகாயங்களுடன் அலறல்!