மீண்டும் சிவகங்கையை சீண்டிய கொரோனா..! 25 நாட்களுக்கு பிறகு கணக்கில் வந்தது..!

By Manikandan S R SFirst Published May 15, 2020, 9:49 AM IST
Highlights

சிவகங்கை மாவட்டத்தில் 25 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் அம்மாவட்டத்தில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் 500ஐ கடந்திருந்த நிலையில் நேற்று 447 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்திருக்கிறது.

இன்றைய நிலவரப்படி 2,240 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,274 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நீங்கிய மாவட்டங்களாக ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்கள் இருந்தன.

திமுக எம்.எல்.ஏ மகன் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் நிர்வாகிகள்..!

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் 25 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் அம்மாவட்டத்தில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காரைக்குடி ரெயில்வே குட்ஷெட் பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. கொரோனா பாதித்த அப்பெண் சமீபத்தில் மும்பையில் இருந்து காரைக்குடி வந்த நிலையில் அவர் வசிக்கும் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 13 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். முன்னதாக அங்கு 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தனர். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அனைவரும் நலமடைந்து வீடு திரும்பிய நிலையில் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபட்ட மாவட்டமாக சிவகங்கை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!