சிவகங்கை அருகே கிராம ஊராட்சித் தலைவருடன் பெண் வி.ஏ.ஓ.வும் உல்லாசமாக இருந்த போது ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை அருகே கிராம ஊராட்சித் தலைவருடன் பெண் வி.ஏ.ஓ.வும் உல்லாசமாக இருந்த போது ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சொக்கநாதன்புத்தூர் கிராம நிர்வாக அதிகாரியாக வித்யா என்பவர் பணியாற்றி வருகிறார். இதே கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் கண்ணன் என்பவருக்கும், வித்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததும் பஞ்சாயத்து அலுவலகத்திலேயே உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதையடுத்து, இருவரையும் கையும் களவுமாக பிடிக்க கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம், கண்ணனின் இல்லத்திற்கு வித்யா வந்துள்ளார். அப்போது, இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இந்த தகவல் ஊர் மக்களுக்கு தெரியவந்துள்ளது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வித்யாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர், வீட்டினை பூட்டி சிறைபிடித்தனர்.
மேலும் அங்கு ஊர் பொதுமக்களும் திரண்டனர். இதனை அடுத்து இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் மீட்டனர். இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.