35 வயது அண்ணன் மகனுக்கு 12 வயது மகளை திருமணம் செய்து வைத்த தாய்..! குடும்பத்தினரோடு அதிரடி கைது..!

By Manikandan S R S  |  First Published Feb 21, 2020, 5:23 PM IST

12 வயதே நிரம்பிய மகள் என்றும் பாராமல் சிறுமி மதுவை, செந்தில்குமாருக்கு திருமணம் செய்து வைக்க ரத்தினமும் அவரது அண்ணன் குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கு சிறுமியின் தந்தை பால்ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது எதிர்ப்பையும் மீறி சிறுமிக்கு செந்தில்குமாருடன் கட்டாய திருமணத்தை ரத்தினம் செய்துவைத்துள்ளார்.


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இருக்கும் கே.ஆர். தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ரத்தினம். இந்த தம்பதியினருக்கு மது(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 12 வயது மகள் இருக்கிறார். சிறுமி அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். ரத்தினத்தின் அண்ணன் மகன் செந்தில்குமார். 35 வயதான இவருக்கு வெகுநாட்களாக திருமணம் நடைபெறவில்லை என்று தெரிகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இந்தநிலையில் 12 வயதே நிரம்பிய மகள் என்றும் பாராமல் சிறுமி மதுவை, செந்தில்குமாருக்கு திருமணம் செய்து வைக்க ரத்தினமும் அவரது அண்ணன் குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கு சிறுமியின் தந்தை பால்ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது எதிர்ப்பையும் மீறி சிறுமிக்கு செந்தில்குமாருடன் கட்டாய திருமணத்தை ரத்தினம் செய்துவைத்துள்ளார். அதிர்ச்சியடைந்த பால்ராஜ் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.

அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். கட்டாய திருமணம் செய்துவைக்கப்பட்ட சிறுமியை மீட்ட போலீசார், தந்தை பால்ராஜிடம் ஒப்படைத்தனர். 12 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக சிறுமியின் தாய் ரத்தினம், செந்தில்குமார் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த உறவினர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பாஜக பிரமுகர் கடையில் சரமாரி முட்டை வீச்சு..! அறந்தாங்கியில் பரபரப்பு..!

click me!