நான் பிராமணராக பிறந்ததற்கு பெருமைபடுகிறேன் என நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும், கல்வியாளருமான மதுவந்தி கூறியதற்கு சமீக ஆர்வலர் பியூஸ் மானுஷ் எதிர்ப்பு தெரித்து இருக்கிறார்.
நான் பிராமணராக பிறந்ததற்கு பெருமைபடுகிறேன் என நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும், கல்வியாளருமான மதுவந்தி கூறியதற்கு சமீக ஆர்வலர் பியூஸ் மானுஷ் எதிர்ப்பு தெரித்து இருக்கிறார்.
எல்லா பிராமணர்களும் வைதீகம் பார்க்கிறார்களா? எல்ல சத்ரியர்களும் கத்தியை தூக்கிக் கொண்டு போருக்கு போய் நிற்கிறார்களா? எல்லா வைஷியர்களும் வணிகம் மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்களா? ஆனால் அது தான் செய்ய வேண்டும் என்பது கர்மம். ஆனால் பெரும்பாலானவர்கள் அதை செய்வது இல்லை. அவங்க அதை செய்யலைங்கிறதால் அவங்க அது இல்லைனு சொல்ல முடியாது.
சாதி கண்டிப்பாக இருக்கிறது. பிறப்பே ஒரு சாதியில இருந்து தானே தொடங்குகிறது. ஒரு ஜாதியில பிறந்ததனால் நாம உசத்தினு ஒரு ஆட்டம் ஆடுவோம் தெரியுமா? அது தான் தப்பு. நான் பிராமணராக பிறந்ததனால், அச்சமோ, பயமோ, தாழ்வோ, உயர்வோ கொள்ள மாட்டேன். நான் பிராமணராக பிறந்தே. அது தான் என் ஜாதி. நான் பிராமணராக பிறந்ததற்காக பெருமையாக நினைக்கிறேன். ஏன் நான் பெருமையாக நினைக்கக்கூடாது? நீங்க யாரு நான் நினைக்கக்கூடாது எனச் சொல்வதற்கு? இது ஜாதி பெருமை அல்ல. என் பிறப்பின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை. மற்ற சாதியில் பிறந்தவர்களும் பெருமையாக இருக்க வேண்டும். அப்படி இருக்கக்கூடாது என யாரும் வேண்டாம் எனச் சொல்லவில்லையே..? என மதுவந்தி தெரிவித்து இருந்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் ‘’ மதுவந்தியின் பேச்சில் சாதி திமிரும் ஆணவமும் தெரிகிறது. பள்ளிக் கூடம் நடத்தும் ஒருவர் இப்படி பேசுவது வெட்கக்கேடானது’’ எனத் தெரிவித்துள்ளார்.