தமிழக அரசுக்கு மத்திய அரசு திடீர் எச்சரிக்கை... கனமழையால் தமிழகத்துக்கு அலர்ட்!

By Asianet Tamil  |  First Published Aug 13, 2019, 9:29 PM IST

கபிணி அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுவரும் நிலையில், கன மழையின் காரணமாக கபினி அணையிலிருந்து மேட்டூர் அணைக்கு கூடுதலக தண்ணீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மேட்டூர் அணைக்கு அதிகளவில் தண்ணீர் வரலாம் என்று ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 


காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்பதால், தமிழக அரசை மத்திய அரசு எச்சரித்துள்ளது.


 கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மிகக் கனமழை பெய்துவருவதால், கர்நாடக அணைகளிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கபட்டுவருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை வேகமாக  நிரம்பிவருகிறது. தற்போதைய நிலையில் 107 அடிக்கு தண்ணீர் உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

 
இந்நிலையில் கர்நாடகாவில் கபினி நீர்ப் பிடிப்பு பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே கபிணி அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுவரும் நிலையில், கன மழையின் காரணமாக கபினி அணையிலிருந்து மேட்டூர் அணைக்கு கூடுதலக தண்ணீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மேட்டூர் அணைக்கு அதிகளவில் தண்ணீர் வரலாம் என்று ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 
இதன் காரணமாக காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

click me!