மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில்….. வரமறுத்த இளைஞருக்கு கொலை மிரட்டல்… தொழிலதிபர்கள் கைது…!

By manimegalai a  |  First Published Sep 22, 2021, 2:49 PM IST

சேலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்திய இரண்டு தொழிலதிபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.


சேலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்திய இரண்டு தொழிலதிபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலத்தில் ஸ்டேட் பாங் காலனி அருகேயுள்ள சி.ஜே.பளாசியோ என்ற நட்சத்திர விடுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக புகார் எழுந்தது. சில தினங்கங்களுக்கு முன்னர் வினோத்குமார் என்ற இளைஞர் மசாஜ் செய்துகொள்ள சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பெண்கள் வினோத்தை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீஸார் நட்சத்திர விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மசாஜ் சென்ட்ர் என்ற பெயரில் பெங்களூருவை சேர்ந்த இரண்டு பெண்க்ள், நாகலாந்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில் தீரஜ்குமார், பிரபு ஆகிய இரண்டு தொழிலதிபர்கள் ஸ்பா என்ற பெயரில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

தொழிலதிபர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார் பாலியல் தொழில், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்களும் மீட்கப்பட்டு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பிரபல நட்சத்திர விடுதியில் தொழிலதிபர்க்ள் இருவர் மசாஜ் சென்ட்ர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தியதும், அதற்கு இனங்க மறுத்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

click me!