மீண்டும் ஒரு காவு வாங்கிய நீட் தேர்வு... சேலத்தில் விவசாயி மகன் தூக்கிட்டு தற்கொலை..!

By vinoth kumarFirst Published Sep 12, 2021, 11:34 AM IST
Highlights

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூளையூரை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார். இவரது 2வது மகன் தனுஷ்(19) மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019-ம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார். 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தார். மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த அவர் 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இரண்டு முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. 

நீட் தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில் சேலத்தில் தனுஷ் என்ற மாணவர் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூளையூரை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார். இவரது 2வது மகன் தனுஷ்(19) மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019-ம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார். 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தார். மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த அவர் 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இரண்டு முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. 

இந்நிலையில், 3வது முறையாக நீட் தேர்வு எழுதுவதற்காக தயாராகி வந்தார். சனிக்கிழமை நள்ளிரவு 2 மணிவரை தந்தையுடன் பேசிக்கொண்டு படித்துக்கொண்டிருந்தார். பின்னர்,  தந்தை உறங்க சென்ற நிலையில் அதிகாலையில் தனுஷ் தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட பெற்றோர் அதிர்ச்சியில் மகனின் உடலை பார்த்து கதறினர்.

சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், தனுஷ் உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில் மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

click me!