சேலம் பெரியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் தன்னிடம் படித்து வரும் மாணவியுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் தன்னிடம் படித்து வரும் மாணவியுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக் கழகத்தின் ஆங்கிலத்துறையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த உதவி பேராசிரியர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதேபோல், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் எம்ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வரும் மாணவிக்கும், உதவி பேராசிரியருக்கும் இடையே காதல் மலர்ந்தது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அதேசமயம் மாணவியின் வீட்டில் காதல் விவகாரம் தெரிந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு உதவி பேராசிரியரும், மாணவியும் திடீரென மாயமாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் தேடி வந்தனர். இதனிடையே, மாயமான பல்லைக்கழக உதவி பேராசிரியர், மாணவியை திருமணம் செய்து கொண்டு நேற்று கருப்பூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
பின்னர், தகவலறிந்த வந்த மாணவியின் பெற்றோர் மகளை தங்களுடன் வருமாறு அழைத்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அவர் உதவி பேராசிரியருடன் தான் செல்வேன் என உறுதியாக இருந்தார். இதனையடுத்து, எழுதி வாங்கிக்கொண்ட போலீசார் மாணவியை உதவி பேராசிரியருடன் அனுப்பி வைத்தனர்.