சாதி மறுப்பு திருமணம்... நைசாக பேசி பெற்ற மகளுக்கு கருக்கலைப்பு... கம்பி எண்ணும் பெற்றோர்..!

By vinoth kumar  |  First Published Feb 2, 2021, 4:52 PM IST

சேலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணின் கரு கலைப்பு செய்த பெற்றோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 
 


சேலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணின் கரு கலைப்பு செய்த பெற்றோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (40). இவரது மனைவி செல்வி (37). இவர்களது 19 வயது மகள் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் மணமகளின் பெற்றோர் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நான்கு மாதங்களுக்கு முன் பெற்றோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, முடிவில் காதல் கணவருடன் பெண் சென்றார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் கடந்த 21-ம் தேதி தனது காதல் கணவருக்கு தெரியாமல் பெற்றோரை பார்க்க வந்த இளம் பெண்ணை தங்களுடன் இருக்கவேண்டும் என பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்களின் பேச்சைக் கேட்டு பெற்றோர் வீட்டில் இளம்பெண் தங்கியுள்ளார். அப்போது தனது மகள் கர்ப்பமாக இருப்பது பெற்றோர்களுக்கு தெரியவந்ததையடுத்து ஆத்தூரில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் மகளின் கருவை கலைத்துள்ளனர். இதனையடுத்து, அவரது பெற்றோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 

click me!