சேலத்தில் இரண்டு பேருந்துகள் பயங்கர மோதல்... 50-க்கும் மேற்பட்டோர் காயம்..!

Published : Oct 10, 2019, 02:22 PM IST
சேலத்தில் இரண்டு பேருந்துகள் பயங்கர மோதல்... 50-க்கும் மேற்பட்டோர் காயம்..!

சுருக்கம்

சேலத்தில் அரசு பேருந்தும் - தனியார் கல்லூரி பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சேலத்தில் அரசு பேருந்தும் - தனியார் கல்லூரி பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வாழப்பாடியில் இருந்து சேலம் நோக்கி சென்ற 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இந்த பேருந்து 
இராமலிங்கபுரத்தை அடுத்த அயோத்தி பகுதியில் வலது புறமாக திரும்பி முற்பட்டபோது, இடதுபுறமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் அரசுப் பேருந்தில் இருந்த பயணிகளும், தனியார் கல்லூரி பேருந்தில் இருந்த மாணவ, மாணவியரும் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த விபத்தால் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சேலத்தில் பரபரப்பு! திமுக பிரமுகர் சுட்டுக்கொ*லையால் அதிர்ச்சி!
35 வயதில் பலான வேலையை செய்து விட்டு 60 வயதில் சிக்கிய நல்லதம்பி! 25 வருஷத்துக்கு பின் பிடிப்பட்டது எப்படி?