தமிழ்நாடு உடலுறுப்பு தான ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டு சுரேஷின் சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்புகள் தானமாக பெறப்பட்டது. பின் அவை கோவை தனியார் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது. சுரேஷின் உடலுறுப்புகள் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
சேலம் நால்ரோடு அருகே இருக்கும் ராஜாராம் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்(54). இவரது மனைவி பரிமளா(48). இந்த தம்பதியினருக்கு திலக்(23), ஸ்ரீபதி(18) என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தனியார் மருத்துவ காப்பீடு நிறுவனத்தின் முகவராக சுரேஷ் பணியாற்றி வந்தார். கடந்த வாரம் வேலை சம்பந்தமாக சென்னை சென்றிருந்த சுரேஷ் காரில் மீண்டும் சேலம் திரும்பிக்கொண்டிருந்தார்.
undefined
விக்கிரவாண்டி அருகே இருக்கும் முண்டியப்பாக்கம் அருகே கார் வந்த போது விபத்தில் சிக்கியது. இதில் சுரேஷ் படுகாயமடைந்தார். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல்சிகிச்சைக்காக கோவையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சுரேஷ் இருந்து வந்த நிலையில் மூளைச்சாவடைந்தார். அந்த தகவலை மருத்துவர்கள் உறவினர்களிடம் தெரிவித்தனர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் துயரமான சூழலிலும் சுரேஷின் உடலுறுப்புகளை தானம் செய்யும் முடிவை எடுத்தனர்.
அதன்படி தமிழ்நாடு உடலுறுப்பு தான ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டு சுரேஷின் சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்புகள் தானமாக பெறப்பட்டது. பின் அவை கோவை தனியார் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது. சுரேஷின் உடலுறுப்புகள் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். விபத்தில் சுரேஷை இழந்த நிலையிலும் அவரின் உடல் உறுப்புகளை தானமளிக்க முன்வந்த உறவினர்களை மருத்துவமனை நிர்வாகம் பாராட்டினர்.
Also Read: 11 வயது மகளை காமப்பசிக்கு இரையாக்க துடித்த தந்தை..! அதிர்ந்துபோன தாய்..!