கடித்த கட்டுவிரியனை பிடித்து மருத்துவமனைக்கு ஓடிய விவசாயி..! நோயாளிகள் அதிர்ச்சி..!

By Manikandan S R S  |  First Published Jan 26, 2020, 10:48 AM IST

ராமசாமியை பார்த்ததும் சீறிய கட்டுவிரியன் அவரை தீண்டி இருக்கிறது.  அதிர்ச்சியடைந்த அவர் பாம்பை விடாமல் துரத்தி சென்று கட்டையால் அடித்தார். இதில் பாம்பு படுகாயமடைந்து உயிரிழந்தது. பின் பாம்பையும் தூக்கி கொண்டு மருத்துவமனை செல்ல முடிவெடுத்தார். அதன்படி உயிரற்ற பாம்புடன் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு ராமசாமி சென்றார். 


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இருக்கிறது குள்ளப்பநாயக்கன்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராமசாமி. விவசாயியான இவர் விளைநிலங்கள் வைத்துள்ளார். மேலும் ஆடுகளும் வளர்த்து வருகிறார். தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது இவரது வழக்கம். சம்பவத்தன்றும் ஆடுகளை மேய்ச்சலுக்கு வயல்வெளிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவர் செல்லும் பாதையின் எதிரே கட்டுவிரியன் பாம்பு ஒன்று வந்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

ராமசாமியை பார்த்ததும் சீறிய கட்டுவிரியன் அவரை தீண்டி இருக்கிறது.  அதிர்ச்சியடைந்த அவர் பாம்பை விடாமல் துரத்தி சென்று கட்டையால் அடித்தார். இதில் பாம்பு படுகாயமடைந்து உயிரிழந்தது. பின் பாம்பையும் தூக்கி கொண்டு மருத்துவமனை செல்ல முடிவெடுத்தார். அதன்படி உயிரற்ற பாம்புடன் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு ராமசாமி சென்றார். பாம்புடன் மருத்துவமனைக்கு வந்ததை பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைத்தனர்.

அவர்களிடம் அது உயிரற்ற பாம்பு தான் என ராமசாமி விளக்கினார். அதன்பிறகே அங்கு பரபரப்பு அடங்கியது. தொடர்ந்து ராமசாமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பின் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ராமசாமி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: குடிபோதையில் இளம்பெண்ணுடன் உல்லாசம்..! பேத்தியை தொலைத்து பரிதவிக்கும் முதியவர்..!

click me!