கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் மேட்டூர் அணை தற்போது 43 வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கிருக்கும் அணைகள் அனைத்தும் வேகமாக நிரப்பியதை அடுத்து உபரி நீரின் அளவு கூடுதலாக திறக்கப்பட்டது.
undefined
73 ஆயிரம் கன அடியாக இருந்து மேட்டூர் அணையின் நீர்வரத்து 76 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. கர்நாடக-காவிரி எல்லை பகுதியான பிலிகுண்டுவில் 79 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மேட்டூர் அணை இன்று தனது முழு கொள்ளவான 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து டெல்டா பாசனத்திற்காக தற்போது அணையில் இருந்து 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி கரையோரத்தில் இருக்கும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் இருக்கும் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.