தங்கை திருமண நாளில் அண்ணன் உயிரிழப்பு... உடலை பார்த்து கதறிய குடும்பத்தார்..!

By vinoth kumar  |  First Published Sep 4, 2019, 2:38 PM IST

சேலம் அருகே இன்று அதிகாலை தங்கையின் திருமணத்திற்கு காரில் அண்ணன் சென்றுக்கொண்டிருந்த போது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 


சேலம் அருகே இன்று அதிகாலை தங்கையின் திருமணத்திற்கு காரில் அண்ணன் சென்றுக்கொண்டிருந்த போது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சின்னமணலி பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (65). இவருக்கு மஞ்சுநாதன் (43) என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். பி.இ. பட்டம் படித்துள்ள மஞ்சுநாதன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். அபிராமிக்கு விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தியாகதுருவம் பகுதியில் இன்று திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

Tap to resize

Latest Videos

undefined

இந்த திருமணத்திற்காக ஒரு காரில் சரஸ்வதி, மஞ்சுநாதன், முகிலன் ஆகியோர் இன்று அதிகாலையில் புறப்பட்டனர். காரை அதே ஊரை சேர்ந்த ஓட்டுநர் ஆனந்தகுமார் என்பவர் ஓட்டினார். எடப்பாடியில் இருந்து தியாகதுருவத்தை நோக்கி கார் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பாலத்தில் மோதியது. இதில் கார் முன்பகுதி முழுவதுமாக அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் மணப்பெண்ணின் சகோதரர் மஞ்சுநாதன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் உள்ள இருக்கையில் இருந்த தாய் சரஸ்வதி உறவினர் முகிலன், ஓட்டுநர் ஆனந்தகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் சரஸ்வதிக்கு 2 கால்களும் முறிந்தன. விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே விபத்து குறித்து மணப்பெண் அபிராமியிடம் தெரிவிக்க வேண்டாம். திருமணம் தடைபடாமல் நடக்கட்டும் என மணப்பெண்ணின் உறவினர்கள் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து, அபிராமிக்கு நல்லபடியாக திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. 

click me!