பெரியார் தர்ம விரோதி... ரஜினிக்கு வரிந்துகட்டி சப்போர்ட் பண்ணும் ராமானுஜ ஜீயர்..!

By vinoth kumar  |  First Published Jan 23, 2020, 3:55 PM IST

துக்ளக் பத்திரிகை பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ராமர்-சீதை நிர்வாண சிலைக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் சென்றார் என்று குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ரஜினி பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் வீடு முற்றுகையிடப்படும் என பல்வேறு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், எதுவுக்கும் ரஜினி அஞ்சவில்லை 


பெரியார் குறித்து ரஜினி பேசியதில் எந்த தவறும் இல்லை. அவர் ஒரு தர்ம விரோதி என மன்னார்குடி ராமானுஜ ஜீயர் ஆவேசமாக கூறியுள்ளார். 

துக்ளக் பத்திரிகை பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ராமர்-சீதை நிர்வாண சிலைக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் சென்றார் என்று குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ரஜினி பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் வீடு முற்றுகையிடப்படும் என பல்வேறு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், எதுவுக்கும் ரஜினி அஞ்சவில்லை.

Tap to resize

Latest Videos

undefined

இதுதொடர்பாக ரஜினி கூறுகையில்;- தான் பேசியது உண்மை என்றும் எதையும் கற்பனையாக தெரிவிக்கவில்லை. தான் யாரிடமும் மன்னிப்பு கோர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இந்நிலையில், மன்னார்குடி ராமானுஜ ஜீயர் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மன்னார்குடி ராமானுஜ ஜீயர்;- பெரியார் குறித்து ரஜினி பேசியதில் எந்த தவறும் இல்லை. பெரியார் ஒரு தர்ம விரோதி என ஆவேசமாக கூறினார். மேலும், தஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிப்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்துள்ளார்.

click me!