மழழையர் பள்ளி விடுமுறை ரத்து..! அரசு திடீர் அறிவிப்பு..!

By Manikandan S R SFirst Published Mar 14, 2020, 12:42 PM IST
Highlights

தமிழகத்தின் மழழையர் பள்ளிகள் மற்றும் கேரளா மாநில எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து அரசு நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்போது அந்த விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.  நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கபட்டிருக்கிறது.

சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 3,177 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான், தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன.

இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் கொரொனா பாதிப்பிற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

தாறுமாறாக உயரப்போகும் பெட்ரோல்,டீசல் விலை..! வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி..!

அதன்படி தமிழகத்தின் மழழையர் பள்ளிகள் மற்றும் கேரளா மாநில எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து அரசு நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்போது அந்த விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.  நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கபட்டிருக்கிறது.

click me!