ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் தர்மாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் செல்வன் (26). குருப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் இளமதி (23). இவர்கள் இருவரும் ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தனர்.
சேலத்தில் காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் தர்மாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் செல்வன் (26). குருப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் இளமதி (23). இவர்கள் இருவரும் ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தனர்.
undefined
இந்நிலையில், தந்தைப் பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த செல்வன், அந்த இயக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினரான ஈஸ்வரன் உதவியோடு கடந்த கடந்த வாரம் பெரியார் படிப்பகத்தில் இளமதியை செல்வன் திருமணம் செய்து கொண்டனர். பிறகு செல்வனின் நண்பரான சரவணபரத் என்பவரை சந்திப்பதற்காக அங்கிருந்து இளமதியும், செல்வனும் சென்றுள்ளனர்.
இந்நிலையில், சாதி மறுப்புத் திருணம் செய்த ஜோடிகள் வெளியே சென்ற நேரத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 50 பேர் ஈஸ்வரனை தாக்கி அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றுள்ளனர். காரில் செல்லும்போது, செல்வனும், இளமதியும் எங்கே என கேட்டு ஈஸ்வரனை கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது உக்கம்பருத்திக்காடு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் புதுமணத்தம்பதி சென்றதை பார்த்த அந்த கும்பல் புது மாப்பிள்ளையை தாக்கிவிட்டு மணமகள் இளமதியை கடத்திச்சென்றுள்ளனர்.
உடனே ஈஸ்வரன் கடத்தப்பட்டது குறித்து காவலாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, சிசிடிவியில் பதிவான கார்களில் பாமக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொடிகள் கட்டப்பட்டிருந்ததை அறிந்த காவல்துறையினர், கொளத்தூர் செக்ஸ்போர்ட் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, கருங்கல்லூர் வழியாக வந்த ஆம்னிவேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, பெண்ணின் தந்தை ஜெகநாதன் ஆம்னி வேனில் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மணமகன் செல்வன் மற்றும் ஈஸ்வரன் இருவரும் வைக்கப்பட்டிருந்த இடம் தெரியவந்தது. இதன் அடிப்படையில் இருவரையும் காவல்துறையினர் மீட்டனர். கடத்தப்பட்ட புதுமணப்பெண் இளமதியை மீட்க வலியுறுத்தியும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நள்ளிரவு கொளத்தூர் காவல்நிலையத்தை திராவிட விடுதலை கழகத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.