ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் மரணத்தில் சந்தேகம்.. சேலம் எஸ்.பி. புதிய உத்தரவு..!

Published : Oct 21, 2021, 06:18 PM IST
ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் மரணத்தில் சந்தேகம்.. சேலம் எஸ்.பி. புதிய உத்தரவு..!

சுருக்கம்

ஜெயலலிதா சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் காவலாளி ஓம் பகதூர் என்பவரை கொலை செய்துவிட்டு எஸ்டேட் இருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நீதிமன்ற உத்தரவு பெற்று மறு விசாரணையை தொடங்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெயலலிதா சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் காவலாளி ஓம் பகதூர் என்பவரை கொலை செய்துவிட்டு எஸ்டேட் இருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சம்பவம் நடைபெற்ற அடுத்த 5 தினங்களில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கார் விபத்தில் உயிரிழந்தார். 

இது தொடர்பாக ஆத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கனகராஜ் உயிரிழந்த சம்பவம் சாலை விபத்து என்று கூறப்பட்ட நிலையில் கனகராஜ் அண்ணன் தனபால் அதை மறுத்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில், கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நீதிமன்ற அனுமதி பெற்று மறு விசாரணையை தொடங்கி உள்ளார். இதனால், கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சேலத்தில் பரபரப்பு! திமுக பிரமுகர் சுட்டுக்கொ*லையால் அதிர்ச்சி!
35 வயதில் பலான வேலையை செய்து விட்டு 60 வயதில் சிக்கிய நல்லதம்பி! 25 வருஷத்துக்கு பின் பிடிப்பட்டது எப்படி?