சேலத்தில் பயங்கரம்.. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவன்.. விஷம் ஊசி போட்டு கொலை செய்த தந்தை?

Published : Oct 04, 2021, 01:44 PM IST
சேலத்தில் பயங்கரம்.. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவன்.. விஷம் ஊசி போட்டு கொலை செய்த தந்தை?

சுருக்கம்

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்சுபள்ளி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி. இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு செந்தமிழ் (18), வண்ணத் தமிழ் (14)  என இரு மகன்கள் இருந்து வந்தனர். இந்நிலையில், இளைய மகன் வண்ணத்தமிழ் முழங்கால் புற்றுநோயால் கடந்த 2 வருடங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். 

சேலம் அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனை தந்தை விஷ ஊசி போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்சுபள்ளி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி. இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு செந்தமிழ் (18), வண்ணத் தமிழ் (14)  என இரு மகன்கள் இருந்து வந்தனர். இந்நிலையில், இளைய மகன் வண்ணத்தமிழ் முழங்கால் புற்றுநோயால் கடந்த 2 வருடங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். 

இந்நிலையில், பெரியசாமி தனது மகனுக்கு தொடர்ந்து பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்த போதும் வண்ணத் தமிழின் காலில் ஏற்பட்ட புற்றுநோய் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது. இதனால், மகன் வண்ணத் தமிழ் கடும் வேதனையிலும், வலியாலும் துடித்து வந்துள்ளார். அதேபோல், நேற்று மாலையும் மகன் வலியால் துடித்த நிலையில் பெரியசாமி மெடிக்கலில் ஒரு ஊசியை வாங்கி வந்து உறவினர் பிரபுவுடன் சேர்ந்து போட்டுள்ளார். சிறிது நேரத்தில் வண்ணத்தமிழன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

உடனே தந்தை பெரியசாமி விஷ ஊசி போட்டு மகனை கொன்றுவிட்டதாக அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் பெரியசாமி மற்றும் பிரபுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், போலீசாரிடம் தந்தை கூறுகையில் மகனுக்கு வலி நிவாரண ஊசியை மட்டுமே செலுத்தியதாகவும் விஷ ஊசி செலுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சேலத்தில் பரபரப்பு! திமுக பிரமுகர் சுட்டுக்கொ*லையால் அதிர்ச்சி!
35 வயதில் பலான வேலையை செய்து விட்டு 60 வயதில் சிக்கிய நல்லதம்பி! 25 வருஷத்துக்கு பின் பிடிப்பட்டது எப்படி?