சேலம் அருகே பணியின்போது டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து வெளியிட்ட ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
சேலம் மாவட்டம் கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் சிக்கம்பட்டி ஊராட்சி மன்ற செயலாளராக கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். ராஜேஸ்வரி மீது தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் மற்றும் கழிவறை கட்டுதல் உள்ளிட்டவற்றில் முறைகேடாக அனுமதி அளித்து ஊழல் செய்ததாக அந்த கிராம பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
undefined
இந்த நிலையில் ராஜேஸ்வரி அலுவலக நேரத்தில் பணிகளை முறையாக செய்யாமல் டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து வெளியிடுவதில் மும்முரமாக இருந்திருக்கிறார். இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் கூறியும் ராஜேஸ்வரி கேட்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிருப்தியில் இருந்த அப்பகுதி மக்கள் ராஜேஸ்வரியின் இந்த நடவடிக்கை குறித்து ஓமலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் புகார் அளித்தனர்.
இந்த புகார் சம்பந்தமாக விசாரணை மேற்கொண்ட ஓமலூர் ஆணையாளர் ராஜேஸ்வரியை புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய செயலாளராக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டு இருக்கிறார்.
அரசு அலுவலகத்தில் முறையக பணிகளை செய்யாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.