120 அடியை எட்டிய மேட்டூர் அணை... விவசாயிகள் மகிழ்ச்சி

By Thiraviaraj RM  |  First Published Sep 24, 2019, 1:27 PM IST

மேட்டூர் அணை நடப்பாண்டில் இரண்டாவது முறையாக 120 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


சேலம் மாவட்டத்தில் இருக்கும் மேட்டூர் அணை கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. பின்னர் காவரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் 119 அடியானது. இதனிடையே தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளதால், மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளவான 120 அடியை எட்டியுள்ளது. 

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 10,409 கன அடி ஆகவும், டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக அணையில் இருந்து 22 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் 16 கண் மதகு வழியாக  7ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இன்று இரவுக்குள் மேட்டூர் அணை 5000 கன அடியாக உயரும். எனவே மேட்டூர் அணைக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

click me!