இனி தினமும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு ஆப்பு... புதிய கட்டுப்பாடுகள் போட்டு கிடுக்குப்பிடி..!

By vinoth kumarFirst Published Apr 9, 2020, 12:17 PM IST
Highlights

ஒவ்வொரு நாளும் வெளியே செல்லக்கூடிய வாகனங்களில் பதிவெண் தகட்டின் மீது ஒரு வண்ணம் என 5 நாள்களுக்கும் ஒவ்வொரு வண்ணத்தால் அடையாள குறியீடு இடப்படும். அவ்வாறு அடையாளக் குறியீடு செய்யப்பட்ட வாகனம் அனுமதிக்கப்பட்ட நாள்களைத் தவிர மற்ற நாள்களில் தேவையின்றி வெளியே சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்து, வாகன ஓட்டி மீது சட்டப்படி நடவகை்கை எடுக்கப்படும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

5 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே சென்று தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வர வேண்டும் என சேலம் மாநகர காவல்துறை புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி வெளியே சுற்றித்திரியும் நபர்கள் மீது கடுமையான தண்டனைகள் வழ்கப்பட்டு, அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இருப்பினும், அத்தியாவசியப் பொருள்கள் வாங்கச் செல்வதாகக்கூறி, அதிகமான பொதுமக்கள் வாகனங்களில் வெளியே சுற்றித்திரிவதால் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

எனவே, இதைத் தடுக்கும் விதமாகச் சேலம் மாநகர சாலைகளில் செல்லக்கூடிய வாகனங்களுக்கு  இன்று முதல் சேலம் மாநகர காவல்துறை சார்பில் புதிதாக வாகனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளன. கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, அத்தியாவசியப் பொருள்கள் வாங்கச் செல்லும் பொதுமக்கள் 5 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே சென்று தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வர வேண்டும் என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஒவ்வொரு நாளும் வெளியே செல்லக்கூடிய வாகனங்களில் பதிவெண் தகட்டின் மீது ஒரு வண்ணம் என 5 நாள்களுக்கும் ஒவ்வொரு வண்ணத்தால் அடையாள குறியீடு இடப்படும். அவ்வாறு அடையாளக் குறியீடு செய்யப்பட்ட வாகனம் அனுமதிக்கப்பட்ட நாள்களைத் தவிர மற்ற நாள்களில் தேவையின்றி வெளியே சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்து, வாகன ஓட்டி மீது சட்டப்படி நடவகை்கை எடுக்கப்படும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

click me!