சேலத்தில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 37,331 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,212 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 47,749 பேர் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 1,141ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவை தமிழகம் முந்தியுள்ளது.
undefined
இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பண்ணவாடி கிராமத்தில் செல்வம் என்பவர் கடந்த 21-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற 2 மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு முதலில் கொரோனா உறுதியானது. பின்னர் நடந்த பரிசோதனையில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 753 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.