சேலத்தில் செம காட்டு காட்டும் கொரோனா... ஒரேநாளில் 101 பேருக்கு பாதிப்பு..!

Published : Jun 26, 2020, 05:40 PM IST
சேலத்தில் செம காட்டு காட்டும் கொரோனா... ஒரேநாளில் 101 பேருக்கு பாதிப்பு..!

சுருக்கம்

சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக ஒரே நாளில் 101 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 595ஆக அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக ஒரே நாளில் 101 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 595 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,977ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 39,999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 911-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 494 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் 101 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 595 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 221 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதேபோல், இன்று வேலூர் மாவட்டத்தில் 147 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 897 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 168 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

சேலத்தில் பரபரப்பு! திமுக பிரமுகர் சுட்டுக்கொ*லையால் அதிர்ச்சி!
35 வயதில் பலான வேலையை செய்து விட்டு 60 வயதில் சிக்கிய நல்லதம்பி! 25 வருஷத்துக்கு பின் பிடிப்பட்டது எப்படி?