ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே குடித்துவிட்டு பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்ட தம்பியை அண்ணனே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள தெற்கு காக்கூர் பகுதியைச் சேர்ந்த சின்னையா என்பவரின் மகன் சிவா (வயது 26). இவர் காதல் திருமணம் செய்துவிட்டு தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் வசித்து வந்தார். மேலும் தஞ்சாவூர் மற்றும் காரைக்குடி பகுதியில் டைல்ஸ் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், அவரது சொந்த ஊரான முதுகுளத்தூர் அருகே உள்ள தெற்கு காக்கூர் பகுதிக்கு இன்று வருகை தந்து அவரது பெற்றோரிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
undefined
அப்போது அங்கு வந்த சிவாவின் அண்ணன் கார்த்திக், எதற்காக சண்டை போடுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் சிவா அரிவாளை எடுத்து அவரது அண்ணன் கார்த்திக்கை தாக்க முயற்சித்துள்ளார். அப்பொழுது அரிவாளை பிடுங்கிய கார்த்திக் சிவாவின் பின்பக்க தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் நிகழ்டத்திலேயே உயிரிழந்தார்.
Savukku Shankar Case: ஜாமீன் கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சவுக்கு சங்கர்
இது குறித்து, முதுகுளத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நிகழவிடத்திற்கு சென்ற முதுகுளத்தூர் காவல் துறையினர் உயிரிழந்த சிவாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் துரைப்பாண்டியன் வழக்கு பதிவு செய்து தம்பியை கொலை செய்த அண்ணன் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.