திருவிழாவை புறக்கணித்த இந்திய மீனவர்கள்; கலை இழந்த கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா

By Velmurugan s  |  First Published Feb 23, 2024, 12:16 PM IST

கச்சத்தீவு பகுதியில் நடைபெறும் அந்தோணியார் ஆலய திருவிழாவை இந்த ஆண்டு புறக்கணிப்பதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து கச்சத்தீவு கலை இழந்து காணப்படுகிறது.


இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இது ராமேசுவரத்தில் இருந்து 12 கிமீ தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டின் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா 23 மற்றும் 24ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

இந்த திருவிழாவில் இந்திய தரப்பிலிருந்து சுமார் 3 ஆயிரத்து 500 பக்தர்களும், இலங்கை தரப்பிலிருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற நான்கு மீனவர்களுக்கு  இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தது. 

ஈரோட்டில் லாரியை வழிமறித்து கரும்புகளை ருசி பார்த்த காட்டு யானை; ஓட்டுநரை துரத்தி அட்ராசிட்டி

இதைகண்டித்து, ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினா் கடந்த சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதைத்தொடர்ந்து இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக 23, 24 தேதிகளில் நடைபெறுவுதாக அறிவிக்கப்பட்ட கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க  விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். 

மீனவர்கள் பிரச்சினையால் இந்த ஆண்டு கட்சத் தீவு திருவிழா புறக்கணிக்கப்பட்டது தமிழக பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட 4 மீனவர்களையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பிப்.17 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்கின்றனர். அதனால் பிப்.23, 24ல் கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு விசைபடகுகளை இயக்க மாட்டோம் என மீனவர்கள் தெரிவித்தனர். 

சேலத்தில் நீர் தேக்க தொட்டியில் அழுகிய நாயின் உடலை வீசி கொடூரம்; கிராம மக்கள் கொந்தளிப்பு

இதையடுத்து விழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்க போவதில்லை. மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தால் கச்சத்தீவு திருவிழாவுக்கான பயண ஏற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. வெளிமாநிலங்களில் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்த நபர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு வரவேண்டாம். விசைப்படகிற்காக அவர்கள் செலுத்திய பணம் விரைவில் திருப்பித் தரப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரனுக்கு நேற்று கச்சத்தீவு சர்ச் விழா திருப்பயண குழு ஒருங்கிணைப்பாளர் ராமேஸ்வரம் பாதிரியார் சந்தியாகு கடிதம் அனுப்பியுள்ளார்.

click me!