சிறுவனின் உயிரைக் குடித்த உறியடி திருவிழா; சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்

By Velmurugan s  |  First Published Sep 9, 2023, 8:58 AM IST

ராமநாதபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் உறியடி கயிற்றை இழுத்து விளையாடிய 7 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு, மேலும் ஒரு சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த மேலாய்குடியைச் சேர்ந்தவர் முருகன். இவர் தற்போது பரமக்குடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு தனது சொந்த ஊரான மேலாய்குடிக்கு நேற்று காலை முருகன் தனது குடும்பத்துடன் வந்துள்ளார்.

பின்னர் மாலை மேலாய்குடி கிருஷ்ணர் கோவில் முன் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் உறியடி நிகழ்வில் முருகன் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார். உறியடி நிகழ்ச்சி முடிந்த பின்னர் முருகனின் மகன்கள் கோகுல ராகுல் மற்றும் கபினேஷ் ஆகிய இருவரும் உறியடி கயிற்றை இழுத்து விளையாடியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  உறியடி பானை கட்டப்பட்டிருந்த கம்பி  அருகே இருந்த மின் கம்பத்தில் உள்ள மின்சார வயரில் உரசியதால் மின்சாரம் தாக்கி கோகுல ராகுல் மற்றும் கவினேஷ் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

Latest Videos

அவங்கள புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்; ரயில் நிலையத்தில் மோதிக்கொண்ட மாணவர்களால் மக்கள் அச்சம்

இதையடுத்து இருவரையும் உடனடியாக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு தூக்கி  சென்று சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இதில் கபினேஷ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தான். மேலும்  கபினேஷின் அண்ணன் கோகுல ராகுல் மேல் சிகிச்சைக்காக மதுரை உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வன் பட அர்ஜூன் பாணியில் ஸ்பாட்டில் டிஸ்மிஸ் செய்த அமைச்சர்; அரசு மருத்துவமனையில் அதிரடி

இச்சம்பவம் குறித்து எமனேஸ்வரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ண ஜெயந்தி விழாவில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அக்கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

click me!