மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இன்று நடைபெறும் மீனவர் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். மதுரை மற்றும் ராமநாதபுரத்திற்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ராமநாதபுரத்தில் நடைபெறும் பிரம்மாண்ட மீனவர் நல மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
undefined
இதில் மீனவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா ,மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு ஐஸ் பெட்டி உள்ளிட்ட உபகரணங்கள், புதிய மீன்பிடி இறங்கு தளம் ,குளிர்பதனை சேமிப்பு கிடங்குகள் , மீனவ கிராமங்களில் கடல் அரிப்பினை தடுக்க தூண்டில் வளைவு , தடுப்பு சுவர் அமைத்தல் , தடைக்கால நிவாரணம் மற்றும் மானிய டீசல் அதிகரிப்பு குறித்த அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இராமேஸ்வரம் பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
"வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை.
வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை."
- முன்னாள் குடியரசுத் தலைவர் pic.twitter.com/Zwcs4Ge3Nf
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை. வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை." என்ற மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பொன்மொழியை புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்.