புதுக்கோட்டை மாவட்டம் தொடையூர், பொம்மாடிமலை, வெள்ளலூர், நார்த்தாமலை கீரனூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால், துடையூர் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேங்கியது.
புதுக்கோட்டையில் பெய்த பலத்த மழையால் ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கி இருந்த நீரில் மூழ்கி காரில் சென்ற பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் தொடையூர், பொம்மாடிமலை, வெள்ளலூர், நார்த்தாமலை கீரனூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால், துடையூர் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேங்கியது. இதை அறியாமல் சென்ற மருத்துவர் சத்தியா தனது மாமியாருடன் காரில் சென்றுள்ளார். அப்போது, கார் சைலன்சரில் எதிர்பாராத தண்ணீர் புகுந்து கார் நின்றது. சிறிது நேரத்தில் கார் நீரில் மூழ்கியது.
undefined
இதில், இருவரும் காரில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த நிலையில் மாமியார் மட்டும் கார் கதவை திறந்து கொண்டு நீச்சல் அடித்து கரை சேர்ந்துள்ளார். ஆனால் சத்தியா சீட் பெல்ட் அணிந்திருந்தால் அதனைக் கழட்டிக் கொண்டு உடனே வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மருத்துவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கிராம மக்கள் தரைப்பாலத்தை மேம்பாலமான மாற்ற வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.