அட கடவுளே.. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு தொற்று பாதிப்பு..!

By vinoth kumar  |  First Published Jun 2, 2021, 4:13 PM IST

புதுக்கோட்டை ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.


புதுக்கோட்டை ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனைக்கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களை காக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியா் உமா மகேஸ்வரி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிடும் பணிகளில் தொடா்ச்சியாக ஈடுபட்டு வந்தார்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து மருத்துவா்களின் ஆலோசனைப்படி அவா் தனது ஆட்சியர் முகாம் அலுவலகத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் மருத்துவர்களின் அறிவுரையின்பேரில் மருந்துகளையும் எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஆட்சியர் உமா மகேஸ்வரி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

click me!