புதுக்கோட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை ஆடு திருட வந்தவர் என தவறுதலா நினைத்து மின் கம்பத்தில் கட்டி வைத்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆரியூரைச் சேர்ந்த சண்முக என்பவரது மகன் கணேசன். தாய், தந்தையை இழந்த இவர் தனது சகோதரர் வீடுள்ள புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் படித்த இவர் அப்போது நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக மனநிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கால் போன போக்கில் எங்காவது போவதும், மீண்டும் வீடு திரும்புவதுமாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அன்னவாசல் அருகே உள்ள பெருமாநாடு பகுதியில் சுற்றி திரிந்த இவரை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆடு, மாடு திருட வந்தவர் என்று தவறுதலாக நினைத்து மின்கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.
நானே பெரிய ரௌடி தான் . . . வெட்டிட்டு பொயிட்டே இருப்பேன் - சீமான் ஆவேசம்
தொடர்ந்து இவரது படத்தை சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து இவர் குறித்து விவரம் அறிந்தவர்கள். அந்த தகவலை பதிவிட்டுள்ளனர். இதை அறிந்த பெருமாநாடு பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக தவறை உணர்ந்து அவரை பத்திரமாக ஊருக்கு செல்லுமாறு வழி அனுப்பி வைத்துள்னர்.