செவிலியர்களின் போராட்டத்தால் பூட்டப்பட்ட அரசு மருத்துவமனை; நோயாளிகள் கடும் அவதி

By Velmurugan sFirst Published Aug 9, 2023, 10:34 AM IST
Highlights

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 மணி நேரம் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் அதிகாரிகள் பணியிடத்தை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், பதவி மறுசீரமைப்பு செய்தல் மற்றும் முறையாக இடமாறுதல் கொள்கையை பின்பற்ற வேண்டும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி உயர்த்தப்பட்ட நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் இரண்டு மணி நேரம் பணியில் இருந்து வெளிநடுப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 மருத்துவமனை வளாகத்தினுள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். செவிலியர்களின் இந்த போராட்டத்தினால் அரசு மருத்துவமனை நுழைவாயில் 2 மணி நேரம் மூடப்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு உணவு வாங்கி செல்பவர்களும் நோயாளிகளை காலை நேரத்தில் பார்க்க வந்தவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

6 வயது சிறுமிக்கு பாலியல்  தொல்லை கொடுத்த 65வயது முதியவர் கைது

மேலும் தினந்தோறும் வரும் நோயாளிகள் அட்டை முன் பதிவு செய்ய முடியாமல் கடும் அவதிக்கும் ஆளாகினார்கள். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஊழியர்களின் போராட்டத்தால் பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் இரண்டு மணி நேரம் வெளியிலேயே காத்து கிடந்தனர். இதுகுறித்து செவிலியர் ஒருவர் கூறும் பொழுது, 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்ட இரவு நேர பணி தற்போது ஒன்பது நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. 

கிராமங்களில் கல்வியின் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

இதனால் கடுமையான மன உளைச்சல் ஏற்படுகிறது. அரசு மருத்துவமனையில் 15-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இவைகளை உடனடியாக நிரப்பிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

click me!