விருதுநகர் மாவட்டம் சங்கமம் நாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி, நடுவப்பட்டி ஊராட்சி தலைவர் சங்கர் (52), நெடுங்குளம் ஊராட்சி தலைவர் சமுத்திரம் (55) உள்ளிட்ட 6 பேர் சென்னையில் நடக்கும் ஊராட்சி தலைவர்கள் பேரணியில் கலந்து கொள்வதற்காக காரில் வந்துக்கொண்டிருந்தனர்.
விராலிமலை அருகே சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சங்கமம் நாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி, நடுவப்பட்டி ஊராட்சி தலைவர் சங்கர் (52), நெடுங்குளம் ஊராட்சி தலைவர் சமுத்திரம் (55) உள்ளிட்ட 6 பேர் சென்னையில் நடக்கும் ஊராட்சி தலைவர்கள் பேரணியில் கலந்து கொள்வதற்காக காரில் வந்துக்கொண்டிருந்தனர். கார் விராலிமலை அருகே வந்துக்கொண்டிருந்தது.
இதையும் படிங்க;- பச்சோந்தியாக மாறிவிட்டது லஞ்ச ஒழிப்புத்துறை.. ஓபிஸ் வழக்கில் லெப்ட் ரைட் வாங்கி அலறவிட்ட நீதிபதி.!
அப்போது சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது பயங்கர வேகத்தில் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி (52), கிருஷ்ணபேரி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அபிமன்னன் (52) இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க;- தமிழகத்தையே காப்பாத்த முடியல.. இவரு இந்தியாவை காப்பாத்த போறாராம்.. ஸ்டாலினை எகிறி அடிக்கும் இபிஎஸ்.!
மேலும் நடுவப்பட்டி ஊராட்சி தலைவர் சங்கர் (52), நெடுங்குளம் ஊராட்சி தலைவர் சமுத்திரம் (55), கார் ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.