புதுக்கோட்டையில் பெய்த கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை ஏறக்குறைய நிறைவுக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் வரும் 17 ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. அடுத்த சில தினங்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்றிலிருந்து பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ள காடாக காட்சியளிக்கிறது. இதையடுத்து மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. நேற்று முதல் தொடர் கனமழை பெய்துவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.