புதுக்கோட்டைக்கு சுதந்திர தினம் இன்றா அல்லது அது இந்தியாவுடன் இணைந்த மார்ச் 3 ம் தேதியா என சமூக வலைத்தளங்களில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது ..
ஆங்கிலேய ஆட்சி முடிவுக்கு வந்து நாடு சுதந்திரம் அடைந்தபோது பாரதம் முழுவதும் பரவி இருந்த சமஸ்தானங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டது . எனினும் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானம் ஆகஸ்ட் 15 அன்று இணைக்கப்படவில்லை .
சுதந்திரம் அடைந்து 7 மாதங்கள் கழித்து ( 3-3 -1948) அன்று தான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் ராஜகோபால தொண்டைமான் முறைப்படி இந்தியாவோடு தனது சமஸ்தானத்தை இணைத்ததோடு தனது அரண்மனை கஜானாவில் இருந்த பணம் முழுவதையும் மத்திய அரசிடம் ஒப்படைத்தார் . அதுவரையிலும் புதுக்கோட்டை சமஸ்தானம் தனி ராஜ்யமாக தான் இருந்தது .
undefined
இதைவைத்து தான் புதுக்கோட்டையின் சுதந்திர தினம் எப்போது என விவாதித்து வருகின்றனர் . எனினும் வழக்கம் போல் மாவட்டம் முழுவதும் 73 வது இந்திய சுதந்திர தினமான இன்று கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது .
இந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவோடு இணைந்த நாளான மார்ச் 3 ம் தேதியை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர் புதுக்கோட்டை மக்கள் .