புதுக்கோட்டையில் விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தம்பதியை மீட்ட, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி சிகிச்சை அளித்து தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர், பின், சென்னை செல்ல, திருச்சி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
undefined
அப்போது, கீரனூர் அருகே இளையாவயல் பகுதியில், அப்பகுதியைச் சேர்ந்த, சகாயராஜ்(45) மேரி (40) தம்பதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது, விபத்தில் சிக்கி, ரத்த வெள்ளத்தில் சாலையோரம் விழுந்து கிடந்தனர். அவ்வழியாக சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் இதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, காரை விட்டு வேகமாகக் கீழே இறங்கிச் சென்று காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த மேரி மற்றும் சகாயராஜுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸுக்காகக் காத்திருக்காமல், உடனே தனது பாதுகாப்பு வாகனத்தில் அந்தத் தம்பதியை கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து, கீரனூர் அரசு மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்த அமைச்சர், அந்தத் தம்பதிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் பரிந்துரை செய்தார். அமைச்சரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.