புதுக்கோட்டை அருகே கார் டயர் வெடித்து அடுத்தடுத்து 7 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை அருகே கார் டயர் வெடித்து அடுத்தடுத்து 7 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டையிலிருந்து திருச்சி நோக்கி நேற்று மாலை துடையூரை சேர்ந்த சிதம்பரம் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நார்த்தாமலை அருகே காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் கார் தாறுமாறாக ஓடி எதிரே வந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தை அடுத்து இருபுறமும் அடுத்தடுத்து வந்த 5 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் துடையூரை சேர்ந்த கார் ஓட்டுநர் ரங்கராஜ், சிதம்பரம், நாகரத்தினம் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்து உயிருப்பு போராடிக்கொண்டிருந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த நான்கு குழந்தைகள் உட்பட 15 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு 6-ஆக உயர்ந்துள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி -ராமேஸ்வரம் சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.