புதுக்கோட்டையில் செல்போனில் வாட்ஸ் அப் பார்த்துக்கொண்டே அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் வீடியோ வெளியானதையடுத்து அவர்
தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டையில் செல்போனில் வாட்ஸ் அப் பார்த்துக்கொண்டே அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் வீடியோ வெளியானதையடுத்து அவர்
தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகமான விபத்துகள் மது போதையாலும், செல்போன்களாலும் தான் நடப்பதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாகனங்கள் இயக்கும் போது செல்போன்களை தவிர்க்க வேண்டும் பல்வேறு விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இந்த பேருந்தை மூக்கையா என்பவர் இயக்கினார். பேருந்து புதுக்கோட்டை நகரை கடந்த நிலையில் ஓட்டுநர் தனது செல்போனை எடுத்து சாட்டிங் தொடங்கினார். அதைப் பார்த்த நடத்துநர் பேருந்தில் போலீஸ் வருகிறார் என்று ரகசியமாக சொன்னதால் செல்போன் மீண்டும் சட்டை பைக்குள் வைக்கப்பட்டது.
அந்த போலீசார் ஆலங்குடியில் இறங்கிய பிறகு தனது சட்டை பையில் இருந்து செல்போனை எடுத்த அரசு பேருந்து ஓட்டுநர் சுமார் 20 கி.மீ புளிச்சங்காடு கைகாட்டியை கடந்தும் கூட செல்போனை வைக்கவில்லை. இடது கையில் ஸ்டியரிங்கை பிடித்துக் கொண்டு வலது கையில் செல்போனில் வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தார். இதுதொடர்பாக சமூவலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், இடது கையில் ஸ்டியரிங்கை பிடித்துக் கொண்டு வலது கையில் செல்போனில் வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்து கொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மூக்கையாவை ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.