விபத்தில் காயமடைந்து விழுந்து கிடந்த பெண்ணின் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிவதை பார்த்ததும், பதறி அடித்து கொண்டு வந்த டாக்டரும் அமைச்சருமான விஜயபாஸ்கர் உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்தார்.
விபத்தில் காயமடைந்து விழுந்து கிடந்த பெண்ணின் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிவதை பார்த்ததும், பதறி அடித்து கொண்டு வந்த டாக்டரும் அமைச்சருமான விஜயபாஸ்கர் உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துவிட்டு அமைச்சர் விஜய பாஸ்கர் திருச்சி ஏர்போர்ட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, குளத்தூர் இளையாவயல் தேசிய நெடுஞ்சாலை அருகே சென்றுகொண்டிருக்கும்போது, அங்கே பைக்கில் வந்தபோது விபத்தில் சிக்கிய ஒரு பெண் கீழே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார்.
அடிபட்டு கிடந்த அந்தபெண்ணின் மூக்கு, வாய், என முகமெல்லாம் ரத்தம் கொட்டியது. இதை பார்த்ததும் பதறி போன அமைச்சர், உடனடியாக காரை விட்டு கீழே இறங்கி வந்தார். அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீரை தெளித்தார். ஒரு துணியால் மேரியின் முகத்தில் வசழிந்த ரத்தத்தை துடைத்த அமைச்சர், அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தில் அவரை கீரனூர் அரசு மருத்துவமனைக்கு பத்திரமாக ஏற்றி அனுப்பி வைத்தார். அந்த பெண்ணுக்கு கீரனூரில் உடனடி சிகிச்சை தரப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தற்போது அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறாராம். விபத்து நடந்த இடத்தில் வாகன வசதி ஏதும் இல்லாத இடத்தில் தக்க சமயத்தில் அமைச்சர் அங்கு செல்லவும், காயமடைந்த துடிதுடித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணை உடனடியாக மருத்டுவமனைக்கு அனுப்ப முடிந்தது. இதுமட்டுமல்ல.. அவர் போகும் இடங்களில் யாருக்கு எங்கு விபத்து நடந்தால், அமைச்சர் என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல், முதலில் தான் ஒரு டாக்டர் என்பதை மனதில் வைத்து முதலுதவி செய்து உடனடிக மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பவர் தான் நம்ம டாக்டர் விஜயபாஸ்கர்.
சில மாதங்களுக்கு முன்புகூட, விராலிமலை பரம்பூர் அருகே சாலை விபத்தில் இளைஞர் சிக்கியதை கண்ட டாக்டர் விஜயபாஸ்கர், உடனடியாக அவரை, தமது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி கொண்டதுடன், அதே வாகனத்தில் தாமும் ஏறி ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிகிச்சை தந்தார். இதேபோல, சென்னையில் விபத்தில் அடிபட்டு கிடந்த ஒருவரை, தனது காரிலேயே அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தவர்தான் டாக்டர் விஜயபாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.