புதுக்கோட்டை மாவட்டம் அருகே விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மகன் மாதேஸ்வரன். இவர் புதுக்கோட்டையில் அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவன் மாதேஸ்வரன் தலைமுடி அதிகமாக வளர்த்து தாடி வைத்து வந்ததால் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் பொழுது முடியையும் தாடியையும் வெட்டி விட்டு வருமாறு கூறி கண்டித்துள்ளனர்.
புதுக்கோட்டையில் முடியை வெட்டிவரசொல்லி ஆசிரியரால் அனுப்பியதால் பிளஸ் 2 மாணவன் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அருகே விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மகன் மாதேஸ்வரன். இவர் புதுக்கோட்டையில் அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவன் மாதேஸ்வரன் தலைமுடி அதிகமாக வளர்த்து தாடி வைத்து வந்ததால் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் பொழுது முடியையும் தாடியையும் வெட்டி விட்டு வருமாறு கூறி கண்டித்துள்ளனர்.
undefined
இதையும் படிங்க;- விசிக தலைவர் திருமாவளவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்.!
ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தலைமுடியை வெட்டாமல் பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளிக்கு சென்ற மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர் தலைமுடியை ஏன் வெட்டவில்லை. தலை முடியையும், தாடியையும் வெட்டிவிட்டு தேர்வு எழுது என்று கூறி பள்ளியிலிருந்து திருப்பி அனுப்பியுள்ளனர். இந்நிலையில், நீண்ட நேரமாகியும் பள்ளிக்கு சென்ற மகன் வீடு திரும்பததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பள்ளி ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது படிக்கும் பள்ளிக்கு பின்புறம் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- காதல் திருமணம் செய்த நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.. இதுதான் காரணமா?
மாணவனின் தற்கொலைக்கு காரணமான பள்ளியின் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.