தமிழகத்தில் பிரதமர் மோடி எத்தனை முறை குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக வளராது - அமைச்சர் ரகுபதி

By Velmurugan s  |  First Published Feb 28, 2024, 10:53 PM IST

தமிழகத்தில் பாஜகவுக்கு ஓட்டு வங்கியே கிடையாது, பிரதமர் மோடி எத்தனை முறை குட்டிக்கரணம் அடித்தாலும் அவர்களால் தமிழகத்தில் வளர முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டம் பூசத்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களை தூர் வாருவதற்கு ரூ.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பூசத்துறையில் தூர்வாரும் பணியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார் இதனைத் தொடர்ந்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் மோடி மஸ்தான் வேலைகள் எடுபடாது. குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக தமிழகத்தில் வளராது, காலூன்றவும் முடியாது.

Tap to resize

Latest Videos

தூத்துக்குடியில் எம்.பி. கனிமொழியின் பெயரை உச்சரிப்பதை பிரதமர் மோடி தவிர்த்துவிட்டார். அவரிடம் இருந்து நாங்கள் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. எனவே அவரது செயலில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வளர்ச்சி திட்டங்களையும், அவர் ஆற்றிய பங்கிணையும் யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. 

சாந்தனின் பெயர் தமிழ் ஈழ வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் - வைகோ பேட்டி

தமிழக அரசு தனது அதிகாரித்திற்கு உட்பட்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்துவிட்டது. விடுதலை செய்யப்பட்டவர்களில் சிலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் பாஸ்போர்ட் போன்ற சான்றுகள் கிடையாது. அதனால் அவர்களை மத்திய அரசின் மூலமாக தான் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப முடியும். அதனை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

காவல் தெய்வம் கோனியம்மன் தேர் திருவிழாவுக்கு சீர்வரிசை எடுத்து வந்த போலீஸ்; தண்ணீர் விநியோகித்த இஸ்லாமியர்கள்

தமிழகத்தில் பிரதமர் மோடி எத்தனை முறை குட்டிக்கரணம் அடித்தாலும் தாமரை மலராது, வளரவும் முடியாது. பாஜகவுக்கு தமிழகத்தில் வாக்கு வங்கியே கிடையாது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. தமிழகத்தில் மோடி மஸ்தானின் வேலை எடுபடாது என்று தெரிவித்தார்.

click me!