கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனால் சொந்த ஊர் வந்த இளைஞர் 14 நாட்களுக்கு தனி அறையில் தங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார். இதையடுத்து சில நாட்களாக தனிமையில் இருந்த இளைஞருக்கு வீட்டில் இருந்து உணவு கொடுக்கப்பட்டு வந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மரமடக்கி கிராமத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த இளைஞர் தனிமைப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்திலும் இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
undefined
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் மலேசியாவில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஜனவரியில் சொந்த ஊர் வந்தவர் திருப்பூரில் தங்கி இருந்துள்ளார். கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனால் சொந்த ஊர் வந்த இளைஞர் 14 நாட்களுக்கு தனி அறையில் தங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார். இதையடுத்து சில நாட்களாக தனிமையில் இருந்த இளைஞருக்கு வீட்டில் இருந்து உணவு கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று அந்த இளைஞர் தங்கியிருந்த தனி அறை நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகம் அடைந்த உறவினர்கள் பார்த்த போது இளைஞர் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து, அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரும் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.